
+1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் +2 வகுப்புக்குச் செல்லலாமா என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு பிளஸ்-1 தேர்வில் 90.93 % மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்தாண்டு தேர்வு முடிவுகள் இன்று (மே 14) வெளியான நிலையில் கடந்தாண்டை விட 0.24 % பேர் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்நிலையில் 11ம் வகுப்பில் மாணவர்கள் தோல்வி அடைந்தாலும், 12ம் வகுப்பில் தொடரலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்குனர் சேதுராம வர்மா விளக்கம் அளித்துள்ளார்.