
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பைபாஸ் சாலையில் தனியார் நிறுவன அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் கடந்த மாதம் திருடு போனதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி கட்சிகளின் அடிப்படையில் சிவகாசி மீனாட்சி காலனி சேர்ந்த மணிகண்டன்(37) என்பவரை கைது செய்தனர்.
மெக்கானிக்காக வேலை பார்க்கும் மணிகண்டன் கடந்த 4 மாதங்களாக ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, திருத்தங்கல் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் கடைகள் முன்பு நிறுத்தப்பட்டிருந்த 11 மோட்டார் சைக்கிள்களை திருடியுள்ளார். அதன் பிறகு அந்த வாகனங்களை குறைந்த விலைக்கு வெவ்வேறு நபர்களிடம் விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதனால் அந்த நபர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள்களை போலீசார் மீட்டனர். மேலும் மணிகண்டனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.