நாடு முழுவதும் பிரதமரின் வீடு கட்டும் திட்டம் மூலமாக ஏராளமானோர் பயன்பெற்று வருகிறார்கள். இந்த திட்டத்தின் கீழ் தற்போது மோசடிகள் நடந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. அதாவது பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் மூலம் உத்திரபிரதேசத்தில் சில பெண்கள் நிதி பெற்றுள்ளனர். அதன்படி அவர்கள் முதல் கட்டமாக ரூ.40,000 பெற்றுள்ளனர். இந்த பணத்தைப் பெற்ற பெண்கள் தங்கள் கணவரை தவிக்க விட்டுவிட்டு கள்ளக்காதலனுடன் ஓடிவிட்டதாக புகார் எழுந்துள்ளது.

அதாவது உத்திரபிரதேசம் மாநிலத்தில் சஞ்சய் என்ற வாலிபர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அவர் தன்னுடைய மனைவி சூனியா ரூ.40,000 பணத்தைப் பெற்ற பிறகு கள்ளக்காதலனுடன் ஓடிவிட்டதாக புகாரில் தெரிவித்துள்ளார். இந்த புகாருக்கு பிறகு தான் இதே போன்று மற்ற கணவன்மார்களும் புகார் கொடுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து தான் தற்போது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பாக விசாரித்ததில் மொத்தம் 11 பெண்கள் தங்கள் கணவன்மார்களை விட்டு விட்டு கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தது தெரியவந்துள்ளது. மேலும் இதேபோன்று கடந்த வருடமும் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் மூலம் ரூ.50,000 நிதி உதவி பெற்ற 4 பெண்கள் கள்ளக்காதலனுடன் ஓடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.