
உத்திர பிரதேஷ் மாநிலம் கோரக்பூர் பகுதியை சேர்ந்தவர் சத்ய பிரகாஷ் திவாரி. இவரது மகன் கன்ஹியா திவாரி குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். சத்ய பிரகாஷ் தனது மகனை குடியில் இருந்து மீட்டெடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். ஒவ்வொரு முறை மது அருந்திவிட்டு தகராறு செய்யும்போதும் தந்தை மகனுக்கு இடையே தொடர்ந்து பிரச்சனை நிலவி வந்துள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று அளவுக்கு அதிகமாக மது அருந்திய மகன் கன்ஹியாவை சத்ய பிரகாஷ் கண்டித்துள்ளார். இதனால் தந்தை மகனுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கன்ஹியா கல் ஒன்றை வைத்து சத்யபிரகாசத்தின் தலை மற்றும் முகத்தில் கொடூரமாக 20 முறை தாக்கியுள்ளார்.
இது குறித்து அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க விரைந்து வந்தவர்கள் சத்யபிரகாஷை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தலைமறைவாகிய கன்ஹியாவை காவல்துறையினர் வலை வீசி தேடி பிடித்து கைது செய்துள்ளனர்.
वीडियो बनाते रहे लोग… बेटे ने पिता को ईंट से कूचकर मार डाला…!
किसी ने वीडियो छोड़ झगड़ा छुड़ाने का किया होता प्रयास तो बच जाती सत्यप्रकाश की जान।#viralvideo #ViralVideos #gorakhpur #पिपराइच pic.twitter.com/nIOZG03Lit— ANURAG PANDEY🖋️ #tweets are personal (@ANURAGP22784) September 26, 2024