பிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்த பரபரப்பான போட்டியில் லக்னோ அணியானது நான்கு ரன்கள் வித்தியாசத்தில் வென்றது .முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20  ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 238 ரன்கள் எடுத்து. இதன்பின்னர் களமிறங்கிய கொல்கத்தா அணியானது 7 விக்கெட் இழந்து 234 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் லக்னோ அணியானது கொல்கத்தா அணியை நான்கு ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வென்றது. லக்னோ தரப்பில் ஆகாஷ், ஷ்ரத்துல் தாக்கூர் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினார்கள்.

இந்த நிலையில் இந்த ஆட்டத்தில் கொல்கத்தா பேட்டிங்க் செய்து கொண்டிருந்தபோது 13ஆவது ஓவரை  ஷ்ரத்துல் தாக்கூர் வீசினார். அந்த ஓவரில் தாகூர் தொடர்ச்சியாக ஐந்து  வைடுகளை வீசியுள்ளார். ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு பவுலர் தொடர்ந்து ஐந்து வைடுகளை வீசியது இதுவே முதல்முறை. லக்னோ பவுலர்கள் நேற்று மொத்தத்தில் வைடு மூலமாக 20   ரன்கள் வழங்கினார்கள். இதன் மூலம் ஒரு இன்னிங்ஸில் அதிக  வைடு பவுலர் என்ற மோசமான சாதனை படைத்துள்ளார்.