
ராஜஸ்தான் மாநிலம் பில்வாராவைச் சேர்ந்தவர் ரக்ஷா ஜெயின். இவர் எலக்ட்ரோ தெரபிஸ்ட் ஆக பணிபுரிந்து வருகிறார். இரண்டு பிள்ளைகளின் தாயான இவர், 5,000 குழந்தைகளுக்கு தன்னுடைய தாய்ப்பாலின் மூலம் உயிர் கொடுத்துள்ளார். அதாவது ரக்ஷா தனது மகன் பிறக்கும் போது இதே போன்ற பிரச்சனையை எதிர்கொண்டுள்ளார்.
இதன் காரணமாக, பிறந்த உடனே பால் கிடைக்காத பிறந்த குழந்தைகளுக்கு அவர் தாயாக மாறி பால் கொடுத்துள்ளார். இதனால் இவர் சில சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளார். 2018ஆம் ஆண்டு முதல் 160.81 லிட்டர் பால் தாய்ப்பால் வங்கிக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.