
கோவை கொடிசியா மைதானத்தில், திமுக சார்பாக்க நடத்தப்படும் முப்பெரும் விழாவானது கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழா, 2024 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி மற்றும் தேர்தலில் வெற்றியைத் தேடித் தந்த முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு ஆகிய மூன்று காரணங்களை முன்னிறுத்தி இந்த விழா நடத்தப்படுகிறது. இந்த விழாவில் திமுக கூட்டணி கட்சித் தலைவர்களும் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.
இதில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன், உறியில் இருக்கும் கருவாட்டை எடுக்கக் காத்திருக்கும் பூனைபோல, தமிழ்நாட்டில் 1 கருவாட்டையாவது எடுத்துவிடலாம் என பாஜக பார்த்தது ஆனால் அது நடக்கவில்லை. அதற்கு காரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று பேசியுள்ளார்.