
தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி ஒரு சவரன் தங்கம் 53 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே மாதத்தில் 24-ஆம் தேதி ஒரு சவரன் 56 ஆயிரம் ரூபாயை தொட்டது. கடந்த 19-ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் 58,240 ரூபாய்க்கும், ஒரு கிராம் தங்கம் 7,280 ரூபாய்க்கும் விற்பனையானது. முதன் முறையாக நேற்று தங்கம் 59 ஆயிரம் ரூபாயை தொட்டு நகை பிரியர்களை அதிர்ச்சியடைய செய்தது. இப்படி தங்கம் விலை உயர்ந்து கொண்டே போகிறது.
இந்த நிலையில் தங்கம், வைர நகைகள் வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி தங்கம் விலை இனி குறைவதற்கு வாய்ப்பு கிடையாது. எப்போதெல்லாம் உயர்கிறதோ இந்த இடத்தில் இருந்து பயணிக்கும் நிலை தான் உள்ளது. நேற்று ஒரு சவரன் 59 ஆயிரம் ரூபாயாக இருந்தது. ஆனால் இன்று 520 ரூபாய் அதிகரித்தது. மிக விரைவில் தங்கம் 60 ஆயிரம் ரூபாய் உச்சத்தை தொடும். இன்னும் மூன்று ஆண்டுகளில் தங்கம் விலை 1 லட்ச ரூபாய் என்ற இலக்கை நோக்கி பயணிக்கும் என கூறியுள்ளார். இது நகை பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது