13.5 கிலோ உணவை ஒரு மணி நேரத்தில் சாப்பிட்டால் உணவகத்தின் லாபத்தில் இருந்து பத்து சதவீதம் வழங்கப்படும் என அமெரிக்காவில் உள்ள உணவகம் அறிவித்துள்ளது. அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர் ரோகித். உணவகம் நடத்தி வரும் இவர் உணவு பிரியர்களுக்காக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன்படி 13.5 கிலோ எடை கொண்ட உணவை ஒரு மணி நேரத்தில் சாப்பிட்டு முடிப்பவர்களுக்கு தனது உணவகத்தின் லாபத்தில் இருந்து பத்து சதவீதத்தை வழங்குவதாக கூறியுள்ளார். அரிசி, இறைச்சி, சீஸ் கலந்துள்ள இந்த உணவை யாரும் சாப்பிட முடியாமல் தோல்வியையே தழுவியுள்ளனர்.