தமிழகத்தில் நில உரிமை உள்ள நலிவுற்ற  மக்கள் அனைவரும் பயன் பெறும் விதமாக தாமாக வீடு கட்டிக் கொள்ளும் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் ரூபாய் தனி வீடுகள் கட்டிக் கொள்ள மானியம் வழங்கப்படும் என்று அமைச்சர் அன்பரசன் அறிவித்துள்ளார். அதேசமயம் தமிழகத்தில் நகர்ப்புறங்களில் நில உரிமை உடைய நலிவுற்ற மக்கள் தாமாக வீடு கட்டிக் கொள்ளும் திட்டத்தின் கீழ் மாநகரங்கள், நகரங்கள் மற்றும் பேரூராட்சிகளில் ஒரு லட்சம் தனி வீடுகள் கட்டிக் கொள்வதற்கு மானியம் வழங்கப்படும் எனவும் வாரிய திட்டப் பகுதிகளில் வசிக்கும் மகளிர் மேம்பாட்டிற்கு 2000 மகளிருக்கு சிறப்பு சுய தொழில் பயிற்சி வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

மேலும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு 5000 பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.