திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கின்ற உங்களுக்குநிறைய கடமைகள் இருக்கிறது, அதை நீங்கள் மறந்து விடக்கூடாது. வாக்காளர் பட்டியலை சரி பார்ப்பது முதல் பணி. வாக்காளர் பட்டியலில் உங்கள் வாக்கு சாவடிக்குரிய வாக்காளர்களின் விவரங்கள் சரியாக இருக்கிறதா ? யாராவது போலி வாக்காளர்கள் இருக்கிறார்களா ?  இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு இருக்கா ? முழுசா சரிபார்க்கின்ற கடமை உங்களுடையது.

வாக்காளர்களை சந்தித்து பிரச்சாரம் – பரப்புரை மேற்கொள்வது,  நம்முடைய சாதனைகளை அவர்களிடம் எடுத்துச் செல்வது  இரண்டாவது பணி. வாக்குப்பதிவு நாட்களில் வாக்காளர்கள் எல்லாம் வாக்குப்பதிவு மையங்களுக்கு  வர வைப்பது மூன்றாவது பணி. இது மிக மிக முக்கியமான பணி. உங்க வாக்குச்சாவடியில் இருக்கக்கூடிய ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ளவர்களை நீங்கள் ஒவ்வொருதாரக சந்திச்சு, அந்த குடும்பத்தில் ஒருவரா  மாறனும்.

முதலில் வாக்குச்சாவடியில் இருக்கக்கூடிய ஒவ்வொருவரை பற்றியும் முழுசாக தெரிஞ்சு வச்சுக்கோங்க. அதற்காக மாதிரி படிவம் உங்களிடத்திலே இப்பொழுது வழங்கப்பட்டிருக்கிறது. தொகுதிவாரியாக அச்சிடப்பட்டு உங்ககிட்ட சீக்கிரமாக வந்து சேரும். வாக்காளர்களின் உடைய பெயர், அவங்க வயது, அவங்க குடும்பத்திலே யார் யார் என்ன படிச்சிருக்காங்க ? என்ன தொழில் செய்றாங்க ? எந்த கட்சியை சார்ந்தவர்கள் ? முழு விவரமும் உங்ககிட்ட இருக்கணும்.

தினமும் ஒரு மணி நேரத்தை கழகத்திற்காக நீங்கள் ஒதுக்குங்கள். ஒரு மணி நேரம் ஒதுக்குவிங்களா ?  ஒரே ஒரு மணி நேரம் தினமும் கழகத்திற்காக ஒதுக்குங்கள்.  அடுத்ததா அரசின் திட்டங்களை முழுமையாக தெரிந்து வச்சுக்கோங்க. உங்க கிட்ட இன்னைக்கு வழங்கக் பட்டிருக்கின்ற புத்தகத்தை நீங்கள் படித்துப் பார்த்தாலே அரசுடைய திட்டங்களை பற்றி உங்களுக்கு தெளிவாக தெரிந்து விடும் என பேசினார்.