
தமிழக பாஜக நடத்தி வரும் எண் மண், எண் மக்கள் யாத்திரையில் பேசிய அக்கட்சியின் தமிழக மாநில தலைவர் அண்ணண்மாலை, திமுக எப்பொழுதுமே சனாதான தர்மத்திற்கும், இந்து தர்மத்திற்கும் எதிராக இருக்கும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. இது போல பல எடுத்துக்காட்டுகள் இருக்குது. இன்னைக்கு நம்ம பெண்கள் ரோட்ல நிறைய பேர் நிக்கிறாங்க…. அவங்களுக்கு தெரியும் தாயை பழித்தாலோ…. இந்து தர்மத்தையும் பழித்தாலோ… நரேந்திர மோடியை பழித்தாலோ….. மூன்றும் சமம் என்று நினைக்கக் கூடியவர்கள் பெண்கள்.
2019 ல நரேந்திர மோடி அவர்கள் ரஃபேல் ஊழல் என ராகுல் காந்தி சொன்ன பொழுது, அதுவரை காங்கிரசுக்கு கிடைக்காத சரித்திர படுதோல்வியை 2019இல் கொடுத்தீங்க. அதுவரை காங்கிரஸ் பாக்காத ஒரு தோல்வி. இன்னைக்கு நம்முடைய நரேந்திர மோடி ஐயா பத்தி பொய்யும், புரட்டும் நம்முடைய அண்ணன் மு.க ஸ்டாலின் அவர்கள் பேசுகிறார்கள்.
மறுபடியும் நம்முடைய சகோதரிகள், தாய்மார்கள்…. வரலாறு காணாது தோல்வி கொடுக்கணும். திமுகவுக்கு வரலாறு காணாத தோல்வி என்னங்க… 1991இல் ரெண்டே எம்எல்ஏ தான் இருந்தாங்க. அது வரலாறு காணாத தோல்வி தானே.. இன்னைக்கு பாரதிய ஜனதா கட்சியில நாலு பேர் இருக்கோம். திமுக 1991இல் இரண்டு பேர்..
அதுலையும் கலைஞர் ஐயா சட்டசபைக்கு போக மாட்டாங்க… பதவியில் இருந்தார்… அப்பப்போ போயிட்டு இருப்பாங்க. அதை விட மோசமான வரலாறு காணாத தோல்வி என்றால் ? திமுக நிற்கக்கூடிய ஒரு ஒரு இடத்திலும் டெபாசிட்டை இலக்க செய்வது தான் 2024இல் பாராளுமன்ற தேர்தலில் வரலாறு காணாத தோல்வி. அதை தாய்மார்கள் செய்வீர்கள் என தெரிவித்தார்.