திமுக சார்பில் நடந்த பேசிய தமிழக முதல்வரும், திமுக தலைவருமான முக.ஸ்டாலின், CAG அறிக்கைனா… ஒரு ஆய்வறிக்கை. மத்திய அரசுக்கு கட்டுப்பட்டு இருக்கக்கூடிய அமைப்பு அது. ஒவ்வொரு வருஷமும்… அன்னைக்கு அரசினுடைய நிலையை பற்றி… அந்த அரசு செய்திருக்கிற செலவுகளை பற்றி… அதை எல்லாம் ஆய்வு செய்து அதற்கு ஒப்பீடு கொடுப்பார்கள். அதுதான் CAG-யினுடைய வேலை. CAG என்ன சொல்லுதுன்னா…
ஒன்றியத்தில் நடைபெறக்கூடிய பாஜக ஆட்சி ஊழல் ஆட்சி. முறைகேடுகள் அதிகம் கொண்ட ஆட்சி, லஞ்சம் – லாவண்யம் பெருத்துப்போன ஆட்சின்னு சொல்லுது. நாங்க சொல்லல… எதிர்க்கட்சி சொல்லல… நாங்க சொல்றத நீங்க நினைக்க வேண்டாம். நாங்க ஏற்கனவே சொல்லிட்டு இருக்கோம், அது வேற… இப்ப யாரு சொல்லுறா ? சிஏஜி சொல்லுது. மத்திய கணக்கு துறையின் அறிக்கையும் சொல்லுது.
ஏழு விதமான ஊழல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது;
ஒன்னு ரெண்டு இல்ல. ஏழு விதமான ஊழல்கள் வெளிச்சத்திற்கு வந்திருக்கு. ஒன்னு பாரத் மாலா திட்டம், 2. துவாரகா விரைவுப் பாதை கட்டுமான திட்டம், மூன்று சுங்கச்சாவடி கட்டணங்கள், நான்கு ஆயுஷ்மான் பாரத் திட்டம், 5 அயோத்தியா மேம்பாட்டு திட்டம், 6 கிராமப்புற அமைச்சகத்தின் ஓய்வு திட்டம், 7 HAL விமான வடிவமைப்பு திட்டம்… இந்த ஏழு திட்டங்களையும் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்குன்னு மிகத் தெளிவாக எடுத்துச் சொல்லி இருக்கு. நிதியை கையாளுவதுல மோசடிகள் அரங்கேறி இருக்கு என்று இந்த அறிக்கை பட்டவர்த்தனமா அம்பலப்படுத்தி இருக்கு என தமிழக முதல்வர் பேசினார்.