மத்திய பிரதேச மாநிலம் குவாலியார் பகுதியில் வசிக்கும் மென்பொருள் பொறியாளர் ஒருவர் தனது முதல் மனைவியை திருமணம் செய்த நிலையில், அவரது குடும்பத்தினரின் உதவியோடு 5 பெண்களை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் அவரது முதல் மனைவியான மம்தா ஜாம்ரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் 2018 மே 13ம் தேதி ருஸ்தம் சிங்க்ஷேகரை திருமணம் செய்துள்ளார். ஆனால் சில நாட்கள் கழித்து, வேலை காரணமாக திடீரென காணாமல் போனது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து அவரைப் பற்றி விசாரிக்கும் போது, அவருடைய குடும்பம் அவருக்கு ஏற்கனவே பல திருமணங்களை நடத்திருப்பது தெரியவந்தது. மம்தா கடந்த 2022 ம் ஆண்டு அவருக்கு எதிராக தள்ளுபடி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ருஸ்தம் நாடு கடந்து போவதாக சந்தேகித்து அவருடைய பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என மம்தா காவல்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.