
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வின் அறிவியல் பாட செய்முறை தேர்வு மார்ச் 20ஆம் தேதி முதல் 26ம் தேதி வரை நடைபெறும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மேலும் ஏப்ரல் மாதம் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள நேரடி தனித் தேர்வுகள் மற்றும் ஏற்கனவே அறிவியல் பாட செய்முறை தேர்வு எழுத தேர்ச்சி பெறாத தனித்தேர்வர்கள் மேற்படி தேதிகளில் நடைபெற உள்ள அறிவியல் பாட செய்முறை தேர்வில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.