
விழுப்புரம் மாவட்டம் அருகே அகரம் என்ற கிராமத்தில் வசித்து வந்த சரவணன் மகன் சாரதி (28) கடந்த 23ஆம் தேதி கெங்கராம்பாளையத்தில் உள்ள விவசாய நிலத்தில் மோட்டார் கொட்டகை கட்டுவதற்காக சென்ட்ரிங் வேலையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் இரும்பு கம்பி ஒன்றை தூக்கி போது மேலே சென்ற மின் கம்பியில் பட்டு உரசியலில் சாரதி மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
இந்த நிலையில் சாரதிக்கு கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு சத்யபிரியா என்பவருடன் திருமணம் நடைபெற்ற நிலையில் இதுவரை இவருக்கு குழந்தை இல்லாமல் இருந்தது. தற்போது சத்திய பிரியா நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சாரதி உயிரிழந்துள்ளார். நேற்று அவருக்கு இறுதி சடங்கு நடந்து முடிந்த நிலையில் அவருடைய மனைவிக்கு திடீர் பிரசவ வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.