குஜராத் மாநிலத்தில் தனியார் இன்ஜினியரிங் நிறுவனம் ஒன்றில் 10 காலி பணியிடங்களுக்கு ஆட்களை சேர்ப்பதற்கான நேர்காணல் நடைபெற்று உள்ளது. ஆனால் அதற்கு 1800- க்கும் மேற்பட்டோர் போட்டி போட்டு உள்ளனர். அங்கலேஸ்வர் பகுதியில் நேர்காணல் நடந்த தனியார் ஓட்டலில் நுழைவு வாசலில் இரண்டு பகுதியிலும் நெருக்கி அடித்துக் கொண்டு பலரும் உள்ளே புகுந்தனர். பலர் கதவுக்கு வெளியே ஒருவரை ஒருவர் முட்டி மோதியபடி நின்று கொண்டிருந்தனர்.

ஒரு கட்டத்தில் நிற்க முடியாமல் பலரும் கீழே விழுந்தனர். இந்த நிலையில் இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி வேலைவாய்ப்பின்மை பற்றி குற்றம் சாட்டியுள்ளது. மேலும் இது போன்ற சம்பவம் இனி நடக்காமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாஜக சார்பிலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.