தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு இன்றோடு முடிவடைகிறது. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வானது கடந்த மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3 ஆம்தேதி முடிவடைந்தது. பதினோராம் வகுப்பு பொது தேர்வு ஏப்ரல் ஐந்தாம் தேதி முடிவடைந்தது. இதற்கிடையே 12 மற்றும் 12ஆம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணியானது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

அதே போன்று பத்தாம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணியும் மே 3 ஆம் தேதிக்குள் நிறைவு செய்ய தேர்வு துறை அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் முடிவடைவதால் நாளை முதல் கோடைவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வை 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதி வருகின்றனர். இதுவரை தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் தேர்வுகள் முடிந்துவிட்ட நிலையில், இன்று சமூக அறிவியல் தேர்வுடன் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு பெறுகிறது.