பிரதமர் நரேந்திர மோடி மும்பை மற்றும் நவி மும்பை நகரங்களை இணைக்கும் விதமாக அரபிக்கடலில் 22 கிலோமீட்டர் தூரத்திற்கு கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட பாலத்தை திறந்து வைத்துள்ளார். இந்த கடல் வழி பயணத்திற்கு அடல் சேது என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் அடல் சேது பாலம் பற்றி பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனாவிடம் ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் கேள்வி எழுப்புியுள்ளது.

அதற்கு அவர் கூறியதாவது, இந்த பாலத்தினால் 2 மணி நேர பயணம் 20 நிமிடங்களாக குறைந்துவிட்டது. இதை உங்களால் நம்ப முடிகிறதா. இப்படி ஒரு மாற்றம் நிகழும் என்று யாராவது நினைத்திருக்கிறீர்களா.? நவி மும்பையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு செல்லும் பாதைகள் அற்புதமாக இருக்கிறது. இந்தியா கடந்த 10 வருடங்களில் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது. இந்தியாவின் உள்கட்டமைப்பு மற்றும் சாலை வளர்ச்சிகள் என அனைத்தும் அற்புதமாக இருக்கிறது. மேலும் 20 கிலோமீட்டர் நீளம் கொண்ட பாலத்தை 7 முதல் 8 வருடங்களில் கட்டி முடித்துள்ளனர். இதைப் பற்றி விவரிக்க வார்த்தைகளே இல்லை என்று கூறினார்.