
தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு அட்டவணை இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொது தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளார். அதன்படி 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 28ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 15 ஆம் தேதி தொடங்குகிறது. அதன் பிறகு 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 5 ஆம் தேதி முதல் மார்ச் 27ஆம் தேதி வரை பொது தேர்வு நடைபெற இருக்கிறது. அதன் பிறகு 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை பொது தேர்வு நடைபெற இருக்கிறது.
அதன் பிறகு 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு பிப்ரவரி 7 முதல் 14ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்நிலையில் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9-ம் தேதியும், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 19ஆம் தேதியும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 19ஆம் தேதியும் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகிறது. மேலும் பொது தேர்வு அட்டவணை வெளியாகியுள்ள நிலையில் தற்போது முதலில் மாணவர்கள் அனைவரும் தேர்வுக்கு தயாராகுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.