திருச்சி மாவட்டத்தில் உள்ள பொன்மலைபட்டியை சேர்ந்த சுரேந்திர பாபு என்பவர் குடும்பத்துடன் பெங்களூரில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சுரேந்திர பாபு தனது குடும்பத்தினருடன் காரில் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் சிலையாத்தி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது நாமக்கல்லை சேர்ந்த அருண்குமார் என்பவர் ஓட்டி வந்த கார் சுரேந்திர பாபுவின் கார் மீது நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் காரில் வந்த குழந்தைகள் உட்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.