இந்திய சினிமாவின் பிரம்மாண்ட படைப்பாக நடிகர் பிரபாஸ் நடிப்பில் கடந்த ஜூன் 16 ஆம் தேதி வெளியான ஆதிபுருஷ் திரைப்படம் முதல் நாளிலேயே பாக்ஸ் ஆபீஸில் 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. ராமாயணத்தை கலைக்களமாக கொண்டு பிரபாஸ் நடித்துள்ள இந்த  திரைப்படத்தில் ராமனாக  நடிகர் பிரபாஸ், சீதாவாக நடிகை கீர்த்தி சனான், ராவணனாக சைப் அலிகான் நடித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில் உலக அளவில் பாக்ஸ் ஆபிஸில் ஒரே நாளிலேயே ஆதிபுருஷ் திரைப்படம் 140 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.