மத்திய பிரதேச மாநிலத்தின் தர் மாவட்டத்தில் படியல் கிராமம் உள்ளது. இங்கு பழங்குடியின மக்கள் வாழ்கின்றனர். 5,000 மக்கள் தொகை கொண்ட இந்த கிராமத்தில், தற்போது 100-க்கும் மேற்பட்டவர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஐஏஎஸ், ஐபிஎஸ், நீதிபதிகள், வனத்துறை அதிகாரிகள், மருத்தவர்கள் என நிர்வாகத் துறைகளில் பணியாற்றி வருகின்றனர்.

மாநில அரசின் தகவல்படி, இங்கு 90%  மேலான மக்கள் படித்தவர்களாக உள்ளனர். பள்ளி மாணவர்கள் NEET மற்றும் JEE போன்ற கடினமான தேர்வுகளில் வெற்றி பெற்று சாதனை படைத்து வருகின்றனர்.

இந்த கிராமத்தின் சிறப்பு என்னவென்றால், ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது ஒருவராவது அரசுப் பணியில் இருப்பார்கள் என மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த சுமார் 300 பேர் அரசுப் பணியில் இருக்கின்றனர்.

பில்கள் என்ற பழங்குடியினர் இங்கே வாழ்ந்தாலும், கல்விக்காக அவர்கள் காணும் முயற்சி, இளைய தலைமுறையை ஊக்கப்படுத்தும் வகையில் உள்ளதாக அரசு புகழ்ந்துள்ளது. கல்வியை ஆயுதமாக மாற்றி முன்னேறும் படியல் கிராமம், இந்தியாவின் கல்வி வரலாற்றில் ஒரு மாற்றமுடைய அடையாளமாக திகழ்கிறது என்பதில் ஐயமில்லை.