
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஆலிவ் வெஸ்டர்மேன் என்ற மூதாட்டி சமீபத்தில் தனது 100வது வயதை கொண்டாடினார். அப்போது அறியாத நபர்களை என் வாழ்க்கையில் இணைத்துக்கொள்ள மாட்டேன். இதுவே எனது ஆரோக்கிய வாழ்வுக்கு காரணம் என மூதாட்டி கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது “நான் குழந்தைகள் பள்ளியில் பணியாற்றியதால் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருந்தேன். இதுவும் ஒரு காரணம்.
நான் கூறக்கூடிய சிறந்த அறிவுரை என்னவெனில் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருங்கள். உங்களிடம் உள்ளதை சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். குழந்தைகள் உடன் எனது பணி அமைந்தது. இது உங்களை நிச்சயமாக இளமையாக வைத்துக்கொள்ள உதவும். தனக்கு 100 வயதாகிறது என்பதை என்னால் நம்பமுடியவில்லை. ஆச்சரியமாக இருக்கிறது” என்று பேசினார்.