அமெரிக்காவில் உள்ள ஓரிகான் பகுதியை சேர்ந்தவர் எலிசபெத் ஆண்டர்சன். ஹைப்பர்லாக்டேசன் நோயால் பாதிக்கப்பட்ட இவரது உடலில் நாள் ஒன்றுக்கு  6.65 லிட்டர் தாய்ப்பால் சுரக்கிறது. இது சராசரியாக ஒரு தாய்க்கு சுரக்கும் பாலின் அளவை விட 10 மடங்கு அதிகமாகும். 2014 ஆம் ஆண்டு இந்த நோய் அவருக்கு கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் அதிக அளவு தாய்ப்பால் சுரந்ததால் அதை வீணாக்க விரும்பாத எலிசபெத் மற்ற தாய்மார்களுக்கு உதவ முடிவு எடுத்தார்.

இதனால் தாய்ப்பாலை நன்கொடையாக வழங்க முடிவெடுத்தார். இதன் மூலம் இரண்டு குழந்தைகளுக்கு தாயான இவர் ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு தாய்ப்பால் நன்கொடை அளித்து ஊட்டமளித்துள்ளார். இவரது இந்த சேவை குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளின் உயிரை காப்பாற்ற மிகவும் உதவியுள்ளது. 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் எலிசபெத் 1599.68 லிட்டர் தாய்ப்பாலை பால் வங்கிக்கு நன்கொடையாக அளித்துள்ளார். இதன் மூலம் எலிசபெத் ஆண்டர்சன் சியாரா  கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.