தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மத்தூர் வடக்கு கிராமத்தில் காமாட்சியம்மன் கோவிலில் கிராம பூஜாரிகள், பேரவை அருள்வாக்கு அருள்வோர் பேரவை மதுக்கூர்  ஒன்றிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய அமைப்பாளர் செல்லக்கண்ணு தலைமை தாங்கி பேசியுள்ளார்.

மேலும் ஒன்றிய அருள் வாக்கு பேரவை அமைப்பாளர் மணிமேகலை, ஒன்றிய இணை அமைப்பாளர் சிவசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிலையில் மாவட்ட அமைப்பாளர் சின்னப்ப பூஜாரி கலந்து கொண்டு பேசியுள்ளார். அதில் கிராம கோவில் பூஜாரிகள் அனைவருக்கும் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் மாத ஊக்கத்தொகையாக ரூ.10,000  வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.