
அமெரிக்கா மற்றும் சீனாவுக்கிடையே நிலவும் வர்த்தக முரண்பாடு தற்போது மோசமான கட்டத்திற்கு சென்றுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சீனாவிலிருந்து வரும் அனைத்து இறக்குமதிகளுக்கும் 104% வரிவிதிப்பு அறிவித்துள்ளதைக் கண்டித்து சீனாவும் கடும் பதிலடி கொடுத்துள்ளது. இதன் பின்னணியில், சீனா அமெரிக்க பொருட்களுக்கு விதிக்கப்படும் வரிகளை 84% ஆக உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
அதாவது இதற்கு முன்பு 34 சதவீதம் வரி விதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அதனை தற்போது இரட்டிப்பாக அதிகரித்துள்ளது. இது உலக வர்த்தக அமைப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. அதாவது முன்னதாக ட்ரம்ப் அதிக வரி விதித்த நிலையில் அமெரிக்க பொருட்கள் மீதான வரியை சீனா திரும்பப் பெறாவிடில் 104 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று கூறினார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீனா இனி ஹாலிவுட் திரைப்படங்கள் அங்கு வெளியாகாது என்று அறிவித்தது. ஹாலிவுட் சினிமாவில் 10 சதவீத லாபம் சீனாவால் கிடைக்கும் நிலையில் அந்த நாட்டு அதிபரின் அறிவிப்பால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது 84 வரி விதிக்கப்படும் என்று ட்ரம்புக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீன அறிவித்துள்ளது. மேலும் இதன் காரணமாக உலக அளவில் வர்த்தக போர் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதோடு பொருட்களின் விலையும் இரண்டு மடங்கு வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.