
தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் நடத்தப்பட்ட 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 90.93 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்தனர். அதில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் துணைத் தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில் தற்போது நடந்து முடிந்த 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மேலும் விடைத்தாள் நகல் பெறுவதற்கு, தேர்வு முடிவுகள் மீது மறு கூட்டம் மற்றும் மறுமதிப்பீட்டிற்கு மாநில அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு ஆகஸ்ட் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் சென்று நேரடி விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.