
தமிழகத்தில் 11ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளி தலைமை ஆசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் அட்டவணையை பதிவிறக்கம் செய்யலாம். மேலும் மாணவர்கள் தங்களது முடிவுகளை அறிந்து கொள்ளும் வகையில் பள்ளிகளில் தேவையான ஏற்பாடுகளை செய்யவும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.