
உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் ஒரு தெருவோர வியாபாரி ஒரு சிறுமியை தவறாக தொடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஜெகதீஷ் என்பவர் தள்ளுவண்டியில் கடை வைத்துள்ளதாக கூறப்படும் நிலையில் அப்போது ஒரு 11 வயது சிறுமி அங்கு வந்தார். அந்த சிறுமியின் அருகில் மற்றொரு சிறுமியும் இருக்கிறார்.
அந்த சிறுமி பொருட்களை பார்த்தபோது அந்த தெருவோர வியாபாரி அந்த சிறுமியின் இடுப்பு மற்றும் மார்பில் கை வைக்கிறார். பின்னர் அந்த சிறுமியின் கையில் உள்ள ஒரு பொருளை பிடுங்கி அவர் கீழே போட்ட போது தான் சிறுமியை அதிர்ச்சியில் பார்த்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அந்த வியாபாரியை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வீடியோ வெளியான பிறகு சிறுமியின் பெற்றோருக்கும் விவரம் தெரிய வந்தது.
#Ghaziabad में बच्ची के साथ छेड़छाड़ का वीडियो वायरल,पुलिस ने मामला दर्ज कर आरोपी फेरी वाले को लिया हिरासत में। pic.twitter.com/E21K4E0q1A
— प्रवीन मिश्रा/praveen mishra 🇮🇳 (@Praveen_mishra9) April 15, 2025
மேலும் குழந்தைகளுக்கு நல்ல தொடுதல் மற்றும் கெட்ட தொடுதல் போன்றவற்றை சொல்லிக் கொடுக்க வேண்டியது அவசியம் என்பதை இந்த வீடியோ மீண்டும் ஒருமுறை வலியுறுத்திய நிலையில் அந்த நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகிறார்கள்.