டென்மார்க் மற்றும் ஸ்வீடனில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான அடிப்படை உரிமை அந்நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் அந்நாடுகளில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களில் அவ்வப்போது திருக்குர்ஆனை அவமதிக்கும் சம்பவங்கள் நடந்து வருகிறது.

இது இஸ்லாமிய நாடுகள் இடையே சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அந்நாடுகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த சூழலில் குரானை அவமதிக்கும் செயல் சட்ட விரோதமானது என்று அறிவிப்பதற்கான மசோதாவை கொண்டு வர பரிசீலினை செய்து வருவதாக டென்மார்க் நாட்டு அமைச்சர் ரஸ்முஸன் தெரிவித்துள்ளார்.