தர்மபுரி மாவட்டம் வடகரை கிராமத்தைச் சேர்ந்தவர் மாதேஷ்(32) இவர் தனியார் பள்ளியில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை வீட்டிற்கு அழைத்து சென்று மாதேஷ் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் . அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் மாதேஷை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மாதேஷுக்கு 15 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.