திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தலையாமங்கலம் பகுதியில் 65 வயதான சதாசிவம் என்ற முதியவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சதாசிவத்தை கைது செய்தனர். அதன் பின் அவர் ஜாமினில் வெளியே வந்த நிலையில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்தது.

இதனால் காவல்துறையினர் சதாசிவத்தை கைது செய்து சிறையில் அடைத்த நிலையில் இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று திருவாரூர் மகிளா நீதிமன்றத்தில் வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் குற்றவாளிக்கு 103 வருடங்கள் சிறை தண்டனை விதித்தது. அதன்பிறகு 19 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு 7 லட்ச ரூபாய் உதவித்தொகை வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.