
நாட்டிலேயே தமிழ்நாட்டில் தான் சாலை விபத்துக்கள் அதிகமாக ஏற்படுகின்றனர். அதாவது 64,105 சாலை விபத்துகளில் 18,844 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 12 ஆயிரம் பேர் குடிபோதையில் சாலை விபத்தில் உயிரிழந்ததாக மத்திய மந்திரி நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். அதேபோன்று தமிழ்நாடு மாநில குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட அறிக்கையில் சாலை விபத்துகளில் 18,074 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 13,500 பேர் மது போதையில் சாலை விபத்தில் உயிரிழந்ததாக சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ பரவி வருகிறது. இதற்கு தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகத் தகவல் சரிபார்ப்பு விளக்கம் அளித்துள்ளது.
அதில் இது பொய் என்றும், கடந்த 2024ம் ஆண்டு மத்திய மந்திரி நிதின் கட்கரி கூறியதாவது, தமிழ்நாட்டில் 12000 பேர் மது குடித்து சாலை விபத்தில் உயிரிழந்ததாக எதிலும் குறிப்பிடவில்லை. கடந்த 2022 ம் ஆண்டு மதுபோதையில் ஏற்பட்ட சாலை விபத்து இந்திய அளவில் மொத்தமே 1080 ஆகும். அதில் 421 பேர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. இதே போன்று மாநில குற்ற ஆவண காப்பக அறிக்கையிலும் 13,500 பேர் வந்துள்ளதாக எதிலும் குறிப்பிடவில்லை. கடந்த 2024ம் ஆண்டில் மதுபோதையில் வாகனத்தை ஓட்டி வந்ததாக 12,306 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதை வைத்து 12000 பேர் மதுபோதையில் சாலை விபத்தில் உயிரிழந்து உள்ளதாக பொய்யான தகவல் பரவி வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.