
மத்திய அரசு ஊழியர்கள், தனியார் அமைப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து விருது பெறுவதற்கு முன் அனுமதி பெற வேண்டியது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய பணியாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், விருதுடன் பணம், பரிசுகள் எதுவும் பெறக்கூடாது. சில விதிவிலக்கான சூழலில் மட்டுமே விருது பெற அனுமதிக்கப்படும்.
விருது தரும் நிறுவனங்கள் குற்றமற்றது என்பதற்கான சான்று தேவை போன்ற வழிமுறைகள் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே இருக்கும் அறிவுறுத்தல்கள் உண்மையான உணர்வோடு கடைபிடிக்கப்படவில்லை என்பதை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.