
வேலூர் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு கிராமப் பகுதியில் வசித்து வரும் 13 வயது சிறுமியை இயற்கை உபாதை கழிக்க செல்லும் இடத்தில் மூன்று இளைஞர்கள் சிறுமியை கடத்தி கூட்டு பாலில் பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் போக்ஷோ சட்டத்தின் கீழ் மூன்று இளைஞர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். பின்னர் வேலூர் காவல் நிலையத்தில் சிறையில் அடைத்தனர். இது குறித்து பா.ஜ.க உறுப்பினர் நடிகர் சரத்குமார் தனது இணைய பக்கத்தில் கூறியதாவது, தினம் தினம் பாலியல் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது வேதனை அளிக்கிறது.`
மது போதையால் 13 வயது சிறுமி என்று கூட பாராமல் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் காவல் துறைக்கு புகார் அளிக்க சென்றபோது காவல்துறையினரின் அலைக்கழிப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பாதிக்கப்பட்டவர்களின் நிலைமை கருதி காவல்துறையினர் செயல்பட வேண்டும். எனவும் இதற்கான ஒழுங்கான சட்ட விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் கூறினார். மேலும் பெரும்பான்மையான குற்றங்களுக்கு மதுவே காரணமாக உள்ளது.
எனவே மது விற்பனை நெறி முறையை அரசு கையாள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார். கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு அடிப்படை வசதிகளாக கழிவறை வசதிகள் போன்றவை இன்னும் செயல்படுத்தப்படாமல் இருப்பது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பெண் பிள்ளைகளை பாதுகாப்பதில் பெற்றோர்களுக்கும் சமுதாயத்திற்கும் முக்கிய கடமையாகும். இந்த குற்றத்திற்காக குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என நீதித்துறைக்கும் கோரிக்கை வைத்துள்ளார்.