தாய்லாந்தில் தன்னுடைய நண்பர்கள் 14 பேரை ஒரு பெண் கொடூரமாக கொலை செய்துள்ளார். அந்தப் பெண்ணுக்கு தற்போது நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிறுபோர்ன் கான்வாங்க் என்ற நபர் மர்மமான முறையில் இறந்தார். அவருடைய செல்போன் மற்றும் பர்ஸ் போன்றவைகள் திருடப்பட்டிருந்தது. இதில் அவருடைய தோழியான சரரத் ரங்சிவுதபோர்ன் என்ற பெண் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில் அவர் பிடித்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும்  தகவல்கள் தெரியவந்தது.

அதாவது பணத்துக்காக இதே போன்று தன்னுடைய நண்பர்கள் 14 பேரை சயனைடு கொடுத்து அவர் கொலை செய்தது தெரிய வந்தது. மேலும் அவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில் பாங்காக் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் விசாரணைகள் முடிவடைந்த நிலையில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதால் அந்த பெண்ணுக்கு தற்போது நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளது.