மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே 38 வயது மதிக்கத்தக்க கூலித் தொழிலாளி ஒருவர் வசித்து வருகிறார். இவருடைய உறவினரின் மகள் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி. இந்த சிறுமியிடம் தொழிலாளி ஆசை வார்த்தை கூறி தகாத முறையில் பழகி வந்து உறவு வைத்துள்ளார். இதற்கிடையில் கடந்த 6-ம் தேதி சிறுமி திடீரென வீட்டிலிருந்து காணாமல் போன நிலையில் பதறிப் போன பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்தப் புகாரின் படி சீர்காழி மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் திடீரென கடந்த 8-ம் தேதி  சிறுமியை உறவினர் வீட்டில் வந்து விட்டு சென்று விட்டார்.

இதைத்தொடர்ந்து மறுநாள் சிறுமியும் தொழிலாளியும் மாயமாகிவிட்டனர். பின்னர் இருவரையும் போலீசார் வலை வீசி தேட ஆரம்பித்த நிலையில் அதற்குள் தொழிலாளி மற்றும் சிறுமி இருவரும் தங்களை பிரித்து விடுவார்கள் என்ற பயத்தில் விபரீத முடிவு எடுத்துவிட்டனர். அதாவது திருநகரி சாலையில் ஒரு மாந்தோப்பு உள்ளது. அங்கு சிறுமி மற்றும் தொழிலாளி இருவரும் ஒரே புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். அவர்கள் சடலங்களை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.