
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் சின்னதுரை என்ற 23 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் பிஎஸ்சி முடித்துள்ளார். இந்த வாலிபர் ஒரு 14 வயது சிறுமிக்கு செல்போன் மூலமாக பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதாவது செல்போனில் பேசி தொடர்ந்து சிறுமிக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்த நிலையில் இது தொடர்பாக சிறுமி தான் பெற்றோரிடம் கூறினார்.
அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சின்னதுரையை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது