சீனா மற்றும் அமெரிக்கா இடையே வர்த்தகப் போர் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சீன வியாபாரிகள் நேரடியாக அமெரிக்கர்களுக்கு தங்கள் பொருட்களை குறைந்த விலையில் விற்க டிக்டாக்கை பயன்படுத்தி வருகின்றனர்.

அமெரிக்காவில் வரியுடன் விற்கப்படும் சீனாவில் தயாரிக்கப்படும் ஹேண்ட் பேக் போன்ற பிராண்டட் பொருட்களை தாங்களே தருகிறோம் என்றும், இவ்வாறு சீன உற்பத்தியாளர்களிடம் இருந்து நேரடியாக வாங்குவதன் மூலம் விலைகள் பன் மடங்கு குறையும் என்றும் சீன வியாபாரிகள் டிக் டாக்கில் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

 

உதாரணத்திற்கு ஒரு வீடியோவில் லுலுலெமன், லெகின்ஸ், கைப்பைகள், பிர்கின் பைகள் போன்ற பிராண்டட் பொருட்களை அவற்றின் சில்லறை விலையின் ஒரு பகுதிக்கு விற்பதாக கூறுகின்றனர். இதே போன்று எண்ணற்ற வீடியோக்கள் டிக் டாக்கை ஆக்கிரமித்து வருகின்றது.

அதில் பிர்கின் பிராண்டட் ஹேண்ட் பேக் அமெரிக்கவில் 88 ஆயிரம் டாலர்கள் என்றும், அதே பையை 1400 டாலருக்கு தருவதாகவும் ஒருவர் விளம்பரம் செய்துள்ளார். இருப்பினும் இந்த பொருள்களில் பெரும்பாலானவை ஆடம்பரம் பிராண்டுகளின் தயாரிப்பை போல போலியான தயாரிப்புகள் என்ற விமர்சனங்களும் எழுந்து வருகிறது.