
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் மன்னார் பகுதியை சேர்ந்த கலா என்பவருடைய கணவர் அனில் குமார். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் குடும்பத்தினர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஒரு மகனும் உள்ள நிலையில் கடந்த 2009 ஆம் ஆண்டு வீட்டில் இருந்து கலா காணாமல் போய் உள்ளார். அப்போது அவருக்கு 20 வயது. ஆனால் கலா நகைகளை எடுத்துக்கொண்டு யாரோ ஒருவருடன் ஓடிவிட்டார் என்று கிராமவாசிகள் இடையே புரளி பரவியது. அதன் பிறகு மறுமணம் செய்து கொண்ட கலாவின் கணவர் இஸ்ரேல் நாட்டில் வசித்து வருகின்றார்.
இந்த நிலையில் கலா காணாமல் போனது குறித்து சில வாதங்களுக்கு முன்பு காவல் நிலையத்திற்கு உணவு தகவல் சென்றது. பிறகு போலீசார் விசாரணையை தொடங்கிய நிலையில் கணவர் வீட்டில் இருந்த கழிவறை தொட்டியை சோதனை செய்தனர். அதில் கலாவின் உடல் அடையாளம் தெரியாத அளவில் சிதைந்து கிடந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். பிறகு நடத்திய விசாரணையில் நான்கு பேரும் காரில் வைத்து கலாவை கொலை செய்து கழிவறை தொட்டியில் போட்டுவிட்டு சிமெண்ட் கொண்டு மூடி விட்டனர்.
பிறகு கலாவுக்கு வேறு யாருடனும் கள்ளத்தொடர்பு இருந்திருக்கும் என்ற சந்தேகத்தில் அவர் கொல்லப்பட்டுள்ளார் என்று எஃப் ஐ ஆர் பதிவு தெரிவிக்கிறது. அதே சமயம் கலா ஓடிப் போய்விட்டதாக கிராம மக்கள் மத்தியில் புரளியை பரப்பியது அணில் என்பதும் மகனிடம் கலா உயிருடன் இருக்கிறார் வந்துவிடுவார் என்று பொய் கூறியதும் தெரியவந்தது. 15 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண் அவருடைய கணவர் மற்றும் நெருங்கிய உறவினர்களால் கொலை செய்யப்பட்டு வீட்டு கழிவறை தொட்டியில் புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.