பாலிவுட் சினிமாவில் பெண்ணை மட்டும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து பல படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளனர். அந்த வகையில் ஆலியா பட், தீபிகா படுகோன் போன்ற டாப் ஹீரோயின் நடிக்காமல் மிகக் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட சீக்ரெட் சூப்பர் ஸ்டார் என்ற படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவைப்பை பெற்றுள்ளது. அதோடு சர்வதேச அளவில் அதிகமான வசூலை பெற்றுள்ளது. இந்தப் படம் ரூ.15 கோடி செலவில் எடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த படம் ரூ.912 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் அப்போது 16 வயதே ஆன ஜைரா வாசிம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் சேர்ந்து அமீர்கான், மெஹர் விஜ் மற்றும் ராஜ் அர்ஜுன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் பிரியங்கா சோப்ரா மற்றும் பர்ஹான் அக்தருடன் சேர்ந்து டி ஸ்கை இஸ் பிங்க் என்ற படத்திலும் நடித்தார். மேலும் இப்படம் வெளியாகுவதற்கு முன்பே அவர் பாலிவுட்டை விட்டு விலகுவதாக அறிவித்தார்.