
அமெரிக்காவை சேர்ந்த சம்சு- ஜப்பர் என்பவர் லூசியானா மகானம், நியூ ஆர்லியன்ஸ் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் மீது காரை ஏற்றி சுமார் 15 பேரை கொலை செய்துள்ளார். இவரை காவல்துறையினர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் இவர் முன்னாள் ராணுவ வீரர் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் அவர் காரை ஏற்றி கொலை செய்வதற்கு முன்பு தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இவர் டெக்சா மாகாணத்தில் நில விற்பனை தரவராக செயல்பட்டு வந்ததாகவும், அமெரிக்க ராணுவத்தில் சில ஆண்டுகள் பணியாற்றி வந்துள்ளார். கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியிருந்த இவர் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.
இந்த தாக்குதலை நிகழ்ந்துவதற்கு முன்பாக தன சமூக வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்ட வீடியோவில் ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் மீது ஈர்ப்பு ஏற்பட்டும் இது போன்ற தாக்குதலை நடத்த திட்டமிட்டப்பட்டிருப்பதாக குறிப்பிட்டு இருந்தார். முன்னதாக ஆங்கில புத்தாண்டு தினத்தை ஒட்டி புகழ்பெற்ற பர்பன் வீதியில் ஏராளமான மக்கள் குழுமி இருந்தனர். அப்போது அந்த பகுதிக்கு பிக்கப் வாகனத்தை வேகமாக ஓட்டி வந்த சம்சத் கூட்டத்தினர் மீது வேகமாக வாகனத்தை இயக்கியதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலை நடத்தியதும் காவல்துறையினரை நோக்கி கண்மூடித்தனமாக இயந்திர துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியுள்ளார். மேலும் காவல்துறையினர் பதில் தாக்குதல் நடத்தி குற்றவாளியை சுட்டுக் கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.