
சிங்கப்பூரில் மக்கள் புழுக்கள் மற்றும் பூச்சிகள் போன்றவற்றை சாப்பிடுவதற்கு அந்நாட்டு உணவு கழகம் (எஸ்.எப்.ஏ) அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி வெட்டுக்கிளிகள், பட்டுப்பூச்சிகள் உள்ளிட்ட 16 வகை பூச்சிகளை சாப்பிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த பூச்சிகளை மக்கள் விரும்பி வாங்கி செல்வதற்கு எதுவாக மெனுக்களில் புதிய டிஷ் பெயரை குறிப்பிடுகிறார்கள். இந்த பூச்சிகளை கடல் உணவுகளுடன் சேர்த்து பரிமாறுகிறார்கள்.
இவற்றை 30 வயதுக்கு உட்பட்டவர்கள் துணிச்சலாக வாங்கி செல்கிறார்கள் என்று கூறப்படுகிறது. அதோடு தங்களுடைய ஒரே டிஷ்ஷில் அனைத்து வகையான பூச்சி இனங்களும் இருக்க வேண்டும் என்றும் சாப்பிடுபவர்கள் விரும்புகிறார்கள். சிங்கப்பூரில் ஒரு சில விடுதிகளில் 16 பூச்சி உணவு வகைகள் மட்டும் இன்றி சில விடுதிகளில் 30 பூச்சி உணவு வகைகளும் மெனு கார்டில் சேர்க்கப்பட்டுள்ளது. இருப்பினும் இவ்வகை பூச்சிகள் உணவு பாதுகாப்பு கட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். மேலும் விரைவில் பூச்சிகள் மற்றும் அவை சார்ந்த பொருட்களை சீனா உள்ளிட்டா வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.