
கர்நாடக மாநிலம் பெலகாபி மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் 16 வயது சிறுமி ஒருவர் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில் சிறுமியின் பெற்றோரிடம் உங்களின் மகளை நான் திருமணம் செய்து கொள்கிறேன் என்று அந்த வாலிபர் வாக்கு கொடுத்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 7-ம் தேதி சிறுமியின் வீட்டிற்கு தன்னுடைய நண்பர்கள் சிலருடன் இந்த வாலிபர் சென்றார். பின்னர் அந்த சிறுமியை கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்தனர். இதைத்தொடர்ந்து அந்த சிறுமியை காதலன் உட்பட நண்பர்கள் அனைவரும் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததோடு இதைப் பற்றி வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.
பாதிக்கப்பட்ட அந்த சிறுமி நேற்று முன்தினம் தன் பெற்றோரிடம் நடந்த விவரங்களை கூறிய நிலையில் அவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்தப் புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வாலிபரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள நண்பர்களை போலீசார் தேடி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உளளது.