
அந்தேரி ஈஸ்ட் பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க ஜீத்து என்பவர் ஒரு 17 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயங்கர தாக்குதலில் சிறுமி 60 சதவீதம் தீக்காயங்களுடன் கூப்பர் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் ஜித்துவுக்கும் உடலில் தீக்காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் விசாரணை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் கூறும் போது ஜித்துவுடன் தொடர்பு வைக்கக் கூடாது என்று அவர்கள் தங்கள் மகளை எச்சரித்துள்ளனர். இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர்களுக்கு உங்களுடைய மகள் தீ வைத்து எரிக்கப்பட்டதாக தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். அப்போது சிறுமி நான் எந்த தவறும் செய்யவில்லை என்னை ஜீத்து எரித்துவிட்டார் என்று கூறியுள்ளார். மேலும் சிறுமி மற்றும் ஜீத்து இருவரும் தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.