சென்னை மாவட்டம் எண்ணூரில் ஒடிசாவை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் தனது குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் ராஜ்குமாரின் வீட்டில் அவரது மனைவியின் சகோதரியான 17 வயது சிறுமி தங்கியிருந்தார். கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜ்குமார் அந்த 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். சில நாட்கள் கழித்து அந்த சிறுமி கர்ப்பமானார்.

இதுபற்றி விசாரித்த போது தனக்கு நடந்த கொடுமைகளை கூறி சிறுமி அழுதுள்ளார். இதுகுறித்து எண்ணூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் ராஜ்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்து திருவள்ளூர் மாவட்டம் சிறப்பு நீதிமன்றம் ராஜ்குமாருக்கு ஆயுள் தண்டனையும், ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.