
இந்திய அணி கடந்த 2012-13 ஆம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானுடன் நேரடி கிரிக்கெட் தொடரில் விளையாடவில்லை. இவ்விரு அணிகளும் ஆசிய உலகக் கோப்பை மற்றும் ஐசிசி உலகக் கோப்பை போட்டிகளில் மட்டும்தான் விளையாடுகிறது. ஏனெனில் மற்ற போட்டிகளில் இரு நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்பு பிரச்சனையை கருத்தில் கொண்டு மத்திய அரசு அனுமதி வழங்குவது கிடையாது. இந்நிலையில் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் டெஸ்ட் போட்டிகளில் சந்தித்து 17 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடக்குமா என இந்திய கேப்டன் ரோகித் சர்மாவிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர் கூறியதாவது, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே டெஸ்ட் போட்டிகளை நடத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை எனக்கு தெரியாது. இருப்பினும் ஒரு கிரிக்கெட் வீரராக சவாலை சந்திக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். அதன் பிறகு பேட்டிங் மற்றும் பௌலிங் என அனைத்திலும் பாகிஸ்தான் ஒரு சிறந்த அணியாக இருப்பதால் இவ்விரு அணிகளுக்கும் இடையே மீண்டும் போட்டி நடந்தால் ரசிகர்கள் அதை மிகவும் விரும்புகிறார்கள் என்று கூறினார். மேலும் இதற்கு முன்னதாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே அனைத்து போட்டிகளையும் தொடர்ந்து நடத்த வேண்டும் என ரோகித் சர்மா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.