
உத்திர பிரதேசத்தில், ஒரு 17 வயது சிறுவன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஆபாச விடியோக்களை விற்று வந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். ராஜு என்பவரிடம் இருந்து டெலிகிராம் செயலியில் உள்ள ஆபாசக் காணொளிகளை பெற்றுக் கொண்டு, ஒவ்வொரு விடியோவுக்கும் ரூ. 3000 முதல் ரூ. 20000 வரை கட்டணம் வசூலித்து வந்தார்.
வசூலான தொகையில் 30 சதவிகிதத்தை மட்டுமே பெற்றுக்கொண்டு, மீதியுள்ள பணத்தை ராஜுவுக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்த விவகாரம் பற்றி கோரக்பூரில் உள்ள சைபர் காவல்துறைக்கு ஒரு தன்னார்வ அமைப்பின் மூலம் தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அடிப்படையில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, இந்த சிறுவனை கைது செய்தனர். கைபேசியிலிருந்து சுமார் 4000 சிறுவர் ஆபாச விடியோக்கள் கிடைத்தது காவல்துறைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.