
ஆந்திராவில் பள்ளிக்கு தாமதமாக வந்ததற்காக சாய் பிரசன்னா என்ற ஆசிரியர் 18 பள்ளி மாணவிகளின் தலைமுடியை வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் கேஜிபிபி மேல்நிலைப் பள்ளியில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து யாரிடமும் கூற வேண்டாம் என ஆசிரியர் மாணவர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது. இருந்த போதிலும், சிறுமிகள் பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து, இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. ஆசிரியையின் கடும் நடவடிக்கையால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், இப்பிரச்னையை பொதுமக்களின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
இது மாணவர்களிடையே ஒழுக்கத்தை வளர்க்கும் முயற்சி என்று கூறி தனது செயலை நியாயப்படுத்தினார் சாய் பிரசன்னா. அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.